ஒரு மனிதனுடைய இருதயம் எத்தனை முறை துடிக்கிறது?
ஒரு மனிதனுடைய இருதயம் 1 மணி நேரத்திற்கு சுமார் 4306 தடவை துடிக்கிறது! ஏறக்குறைய 1 நாளில் 1 லட்சம் தடவை இருதயம் சுருங்கி விரிகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்தபோது அவருடைய இருதயமும் இப்படித்தான் துடித்தது ஆனால் ஒவ்வொரு முறையும் அவருடைய இருதயம் துடித்தது நமக்காகத்தான் . நாம் நன்றாக வாழவேண்டும் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்று அவருடைய இருதயம் நமக்காக துடித்தது, அதே இருதயம் இன்றும் உங்களை ஆசீர்வதித்து உங்களை உயர்த்த துடித்துக்கொண்டிருக்கிறது. கர்த்தரை நம்புங்கள், பெரிய அற்புதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்!